Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா,கர்நாடகா மாநிலங்களில் எத்தனை புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக?அண்ணாமலை செக்!

கேரளா,கர்நாடகா மாநிலங்களில் எத்தனை புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக?அண்ணாமலை செக்!
X

SushmithaBy : Sushmitha

  |  25 Jun 2025 10:04 AM IST

தமிழக முதல்வர் ஸ்டாலின் 2014-2015 முதல் 2024-2025 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ரூ2532.59 கோடி செலவிட்டதாகவும் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கு ரூ147.56 கோடியை மட்டுமே செலவிட்டதாகும் இதனால் போலிப் பாசம் தமிழுக்கு;பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்

இதற்கு 2006-2014,8 ஆண்டுகளில் நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ675.36 கோடி தமிழுக்கு வெறும் ரூ75.05 கோடி மட்டுமே அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் அதாவது திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியையும்,கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், lபோலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம்

திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

அரைத்த மாவையே நீங்கள் மீண்டும் மீண்டும் அரைப்பதனால்,இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் அவர்களே தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும் மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா மகன் பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர கேரளா மாநிலத்திலோ,கர்நாடகாவிலோ,ஆந்திர மாநிலத்திலோ,புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக யார் உங்களைத் தடுத்தார்கள்

நீங்கள் மத்திய அரசில் அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 - 2014 8 ஆண்டுகளில் நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ரூ675.36 கோடி தமிழுக்கு வெறும் ரூ75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்

கடந்த ஆண்டு தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ 11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா என பதிவிட்டுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News