விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரை காவல்துறை தாக்கியது ஏன்?தீவிரவாதியா?உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மேலும் கடந்த 2021 முதல் லாக்கப் மரணம் அதிகமாக நடந்துள்ளதாகவும் திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார்
இதனை அடுத்து அஜித்குமாரின் மரணம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் ஏ.டி.மரியாகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரிஸ் குமார் ராஜராஜன் மற்றும் பாமக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை முன் வைத்தனர்
இதனை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ன தீவிரவாதியா ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்பிற்காக போலீசார் தாக்குதல் நடத்துவதை ஏற்கலாம் ஆனால் சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை தாக்கியது ஏன் எனத் தெரியவில்லை இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்