Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டியலை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்:முதல்வரின் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்?

பட்டியலை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்:முதல்வரின் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்?
X

SushmithaBy : Sushmitha

  |  2 July 2025 12:12 PM IST

ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு ஒரே வரியில் சாரி என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும் இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்

அதாவது மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் சாரி மா என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன் ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு ஒரே வரியில் சாரி என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும் இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை

சரி,ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால்,இதோ முதல்வர் அவர்களின் ஆட்சியில் காவல்நிலையங்களிலும் காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்

1.பிரபாகரன் வயது 45 - நாமக்கல் மாவட்டம்

2.சுலைமான் வயது 44 - திருநெல்வேலி மாவட்டம்

3.தாடிவீரன் வயது 38 - திருநெல்வேலி மாவட்டம்

4.விக்னேஷ் வயது 25 - சென்னை மாவட்டம்

5.தங்கமணி வயது 48 - திருவண்ணாமலை மாவட்டம்

6.அப்பு என்கிற ராஜசேகர் வயது 31 - சென்னை மாவட்டம்

7.சின்னதுரை வயது 53 - புதுக்கோட்டை மாவட்டம்

8.தங்கபாண்டிவயது 33 - விருதுநகர் மாவட்டம்

9.முருகாநந்தம் வயது 38 - அரியலூர் மாவட்டம்

10.ஆகாஷ் வயது 21 - சென்னை மாவட்டம்

11.கோகுல்ஸ்ரீ வயது 17 - செங்கல்பட்டு மாவட்டம்

12.தங்கசாமி வயது 26 - தென்காசி மாவட்டம்

13.கார்த்தி வயது 30 - மதுரை மாவட்டம்

14.ராஜா வயது 42 - விழுப்புரம் மாவட்டம்

15.சாந்தகுமார் வயது 35 - திருவள்ளூர் மாவட்டம்

16.ஜெயகுமார் வயது 60 - விருதுநகர் மாவட்டம்

17.அர்புதராஜ் வயது 31 - விழுப்புரம் மாவட்டம்

18.பாஸ்கர் வயது 39 - கடலூர் மாவட்டம்

19.பாலகுமார் வயது 26 - இராமநாதபுரம் மாவட்டம்

20.திராவிடமணி வயது 40 - திருச்சி மாவட்டம்

21.விக்னேஷ்வரன் வயது 36 - புதுக்கோட்டை மாவட்டம்

22.சங்கர் வயது 36 - கரூர் மாவட்டம்

23.செந்தில் வயது 28 - தர்மபுரி மாவட்டம்

இவர்களது பெற்றோரிடமும் மனைவி-மக்களிடமும் முதல்வர் அவர்கள் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும் என கேள்வி எழுப்பி உள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News