சாத்தான்குளத்திற்கு ஓடோடி சென்று ஸ்டாலின் குடும்பம் மடப்புரத்திற்கு ஏன் வர மறுக்கிறது:ஹெச்.ராஜா!

அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைப்பேட்டை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாத்தான்குளத்திற்கு ஓடோடி சென்று ஸ்டாலின் குடும்பம் மடப்புரத்திற்கு ஏன் வர மறுக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்
மேலும் எஸ்.பிக்கு தெரியாமல் காவல் நிலையத்தில் எதுவும் நடக்காது அஜித் குமார் இறந்த பொழுது திருப்புவனத்திற்கு வந்த எஸ்பி அஜித் குமாரின் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் ஆனால் அவர் உண்மையை மறைத்து பொய் கூறியுள்ளார் இதனால் அவரையும் குற்றவாளி பட்டியலில் சேர்க்க வேண்டும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு பின் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து தான் அந்த இளைஞனை அடித்துள்ளார்கள்
அச்செயலை அறநிலையத்துறை அதிகாரிகள் எப்படி தடுக்க தவறினார்கள் ஸ்டாலின் மீது எப்போது குற்றச்சாட்டு வந்தாலும் அதில் அமைச்சர் சேகர்பாபு பங்கும் இருக்கிறது அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்று பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும் ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து இறக்கும் வரை அதிமுக பாஜக இணைந்து போராடும் என ஆவேசமாக பேசியுள்ளார்