அஜித்குமார் மரணத்தில் தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்:பதில்கள் வேண்டும் முதல்வரே!

மடப்புரம் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு தமிழக பாஜக தரப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒன்பது கேள்விகளை திமுக அரசிற்கு முன் வைத்திருந்தார் தற்பொழுது அஜித் குமாரின் மரணம் தொடர்பான வழக்கில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது அதன் அடிப்படையில் தற்போது மேலும் மூன்று கேள்விகளை முன் வைத்துள்ளார்
1.அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா மீது ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு அன்றையத் துணை முதல்வர் அவர்களுடைய நேரடி உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கும் திமுக-வின் உயர் மட்டத் தலைமைக்கும் தொடர்புகள் இருந்ததால் தான் தனிப்படை அமைத்து அஜித் குமாரை அடித்தும் துன்புறுத்தியும் விசாரிக்க உடனடி ஆணை பிறப்பிக்கப்பட்டதா
2.அஜித்குமாரை காவலர்கள் துன்புறுத்துவதை நேரில் கண்டு காணொளியாக படம்பிடித்த முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன்,தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார் யார் இவரை அச்சுறுத்துகிறார்கள்
3.FIR பதிவு செய்யாமலேயே தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அந்தத் தலைமைச் செயலக அதிகாரியைப் பற்றிய தகவல்கள் இன்னும் அரசு வெளியிடாதது ஏன்
அஜித்குமாரின் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில்,வெறும் ஆறுதல் வார்த்தைகள் பேசிவிட்டும் இழப்பீடு வழங்கிவிட்டும் அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா என மேலும் 3 கேள்விகளை முன்வைத்து உள்ளார்