தி.மு.க ஆட்சியில் காவல்துறை அராஜகப் போக்கில் ஈடுபடுவது ஏன்? தமிழக பா.ஜ.க தலைவர் கேள்வி?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்த தமிழகத்தில் நடக்கும் இன்றைய நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறார். இது தொடர்பாக அவர் கூறும் பொழுது, "முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாததன் விளைவாக விருதுநகர் பட்டாசு ஆலையில் எட்டு உயிர்கள் பலியான நிலையில், நிவாரணம் கோரிய பொதுமக்களை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மிரட்டியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது.
புகாரளிக்க வந்த கர்ப்பிணி பெண்ணை தாக்குவது, விசாரணை என்று கூறி அப்பாவி இளைஞரின் உயிரைப் பறிப்பது, பல நூறு மக்களுக்கு மத்தியில் மைக்கில் வைத்தே "ஒழுங்கா இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று அச்சுறுத்துவது என திமுக ஆட்சியில் காவல்துறை அராஜகப் போக்கில் ஈடுபடுவது ஏன்?
ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக செயல்படுவதாலும், அதிகாரம் கையில் இருப்பதாலும், பாமர மக்களை கொடுமைப் படுத்தலாம் எனும் எண்ணமா? அதிகரித்து வரும் குற்றங்கள் ஒருபுறம், காவல்துறையின் அராஜகம் மறுபுறம் என இருதலை கொள்ளியிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் தமிழக மக்கள், இந்த துயரங்களுக்கு 2026-இல் ஒரு முடிவுரை எழுதுவர் என்பது உறுதி!