முகசாயல் சிறிது ஒத்துப்போவதை வைத்து பரப்பப்படும் அவதூறு:இதுதான் உண்மை!

சமூக வலைதளத்தில் அண்ணாமலையுடன் அஜித் குமார் வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகின்ற நிகிதா புகைப்படம் எடுத்துள்ளது போன்ற செய்தி வைரலாக பரவி வந்தது இந்த செய்தி முற்றிலும் போலி என்பதை ஃபேக்ட்ஸ் அண்ட் பிராக்ஸ்பெக்டிவ்ஸ் நிரூபித்ததோடு அண்ணாமலையுடன் புகைப்படத்தில் இருப்பது பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரஜினி என்பதையும் கூறியுள்ளது
இது தொடர்பாக ஃபேக்ட்ஸ் அண்ட் பிராக்ஸ்பெக்டிவ்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தி வாசிப்பாளர் செந்தில்வேல் அவர்கள் தனது முகநூல் வலைதள கணக்கிலிருந்து சமீபத்திய அஜித்குமார் காவல் நிலைய மரண வழக்கில் புகாரளித்த நிகிதா என்ற பெண்மனியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களைத் தொடர்பு படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்
நமது ஃபேக்ட்ஸ் அண்ட் பிராக்ஸ்பெக்டிவ்ஸ் சார்பாக ஆராய்ந்த போது அதில் அண்ணாமலை அவர்களுடன் இருப்பவர் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரஜினி என்பதும் அவரின் முகசாயல் சிறிது ஒத்துப்போவதை சாதகமாக வைத்துக் கொண்டு இவ்வாறு அவதூறு பரப்பும் விதமாக இந்தப் புகைப்படமானது பதியப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது
இது போன்று அவதூறு பரப்பும் செய்திகளை மக்கள் ஆய்வு செய்யாமல் பதிவிட வேண்டாம் மேலும் இது போன்று அவதூறு பரப்பும் செய்திகளை பதிவது கண்டனத்துக்குறியதாகும் என தெரிவித்துள்ளது