மைக் கிடைத்தால் என்னவெல்லாம் பேசலாமா? பொன்முடியை சரமாரியான கேள்விகளால் விளாசிய ஐகோர்ட்!

By : Bharathi Latha
மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும்'' என ஆபாச பேச்சு தொடர்பாக பொன்முடி வழக்கில், சென்னை ஐகோர்ட் நீதிபதி குறிப்பிட்டு பேசியிருக்கிறார். சென்னையில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.
அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார். தொடர்ந்து, அமைச்சர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. பொன்முடி அவர்கள் இப்படி செய்வது இது முதல் முறை அல்ல ஏற்கனவே பல்வேறு முறைகளில் பொதுக்கூட்டத்தின் போது பெண்களை நோக்கி சரமான சரமாரியான வார்த்தைகளை விட்டு இருக்கிறார். இந்த முறை சற்று தடித்த வார்த்தையை அவர் பயன்படுத்தியது அனைவரின் கோபத்திற்கு காரணம். ஆபாசமாக பேச்சு தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி முன்னாள் அமைச்சர் பொன்முடியை நோக்கி கேள்வி எழுப்பும் பொழுது, மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும். அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுகளை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது" என கூறினார்.
