உங்களுடன் ஸ்டாலின்:ஜாபர் முதல் கன்னுக்குட்டி வரை!லிஸ்ட் போட்ட எஸ்.ஜி.சூர்யா!

By : Sushmitha
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் உங்கள் இல்லங்களுக்கே வந்து மனுக்களைப் பெற்று அதனைத் தொடர்ந்து நடைபெறும் 10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் நகர்ப்புறப் பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன பொதுமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
இதற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மகத்தான புதிய திட்டம் உங்களுடன் ஸ்டாலின் இத்திட்டத்தின் கீழ் உங்கள் இல்லம் தேடி வரும் நிபுணர் குழு போதைப் பொருள் தடுப்பு சேவைகளுக்கு போதைப் பொருள் கடத்தல் ஜாஃபர் சாதிக்.இயற்கை பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு மணல் கடத்தல் கரிகாலன்.பெண்கள் பாதுகாப்பு வழிகாட்டலுக்கு பாலியல் குற்றவாளி ஞானசேகரன்.தரமான மதுபான விநியோகத்திற்கு சாராய வியாபாரி கன்னுக்குட்டி திராவிடமாடல் அரசின் இந்த சிறப்பு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என இதுவரை திமுக ஆட்சியும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும் அந்த குற்றங்களில் முக்கிய குற்றவாளிகளாக உள்ளவர்கள் பற்றியும் அவர்களுக்கும் திமுகவிற்கும் இருக்கும் தொடர்பை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
இந்த பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்று வருகிறது
