அனுபவசாலிகள் இல்லையென்றால் எந்த கட்சியும் தேறாது: நடிகர் ரஜினிகாந்த் கூறிய சீக்ரெட்!

By : Bharathi Latha
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறும் பொழுது, "அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட,'' என்று பேசினார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மேலும் கூறும்போது, "பல மாதங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கில் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். எல்லோரும் நண்பர்கள் தான். அப்போது நான் பேசும்போது, நான், ஓல்டு ஸ்டூடண்டை சமாளிப்பது கடினம்.
அதெல்லாம் ரொம்ப கஷ்டம். அவர்கள் வகுப்பறையைவிட்டு செல்லமாட்டார்கள்' என்று கூறியிருந்தேன். அதே சமயம், 'அப்படியிருந்தாலும் ஓல்டு ஸ்டுடன்ட் தான் தூண்கள். அவர்கள் தான் பவுண்டேஷன். அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட,'' என்று பேசினார்.
