ஆசிரியர்களின் கண்ணீரைத் துடைக்காத அரசு,அலங்காரப் பேச்சுகளால் சாதிப்பது என்ன?எஸ்.ஜி.சூர்யா!

By : Sushmitha
பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டத்தில் இறங்கி உள்ளனர் ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக
இதற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா ஆசிரியர்களின் கண்ணீரைத் துடைக்காத அரசு அலங்காரப் பேச்சுகளால் சாதிப்பது என்ன விளக்கின் திரியைப் போலத் தங்களைத் தாங்களே கரைத்துக்கொண்டு இந்தச் சமூகத்திற்கு அறிவொளி ஏற்றும் உன்னதப் பணியைச் செய்பவர்கள் ஆசிரியர்கள் ஆனால் இந்த திராவிட மாடல் அரசோ,தேனை உறிஞ்சிய பின் சக்கையைத் தூக்கி எறிவதைப்போல,பல்லாண்டுகளாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, இன்று அவர்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளது
2021 தேர்தல் வாக்குறுதி எண் 181-இன் படி பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்தது திமுக ஆனால் வெறும் ரூ12,500 மாத ஊதியத்தில் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற முடியாமல்,ஐந்தாவது நாளாகப் போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது இந்த அரசு. பகுதிநேர ஆசிரியர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கமும் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருப்பது ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள தார்மீக வலுவை எடுத்துக்காட்டுகிறது
போராடும் ஆசிரியர்களை உடனடியாக அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கையான பணி நிரந்தரத்தை நிறைவேற்றுவதற்கான உறுதியான கால அட்டவணையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்
