Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை சிறுமுகை அருகே மந்த கதியில் நடக்கும் புதிய பாலம் அமைக்கும் பணி:பரிசலில் பயணிக்கும் மாணவர்கள்!

கோவை சிறுமுகை அருகே மந்த கதியில் நடக்கும் புதிய பாலம் அமைக்கும் பணி:பரிசலில் பயணிக்கும் மாணவர்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  16 July 2025 7:56 PM IST

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இரு கிராமங்களை இணைக்கும் உயர்மட்டப் பாலம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ளதால் ஆற்றைக் கடக்க ஆபத்தான முறையில் பரிசல் பயணத்தை அப்பகுதி பொதுமக்கள் மாணவர்கள் மேற்கொள்கின்றனர்

அந்த ஆபத்தான பரிசல் பயணத்தை மேற்கொள்ளும் வீடியோ காட்சியை பகிர்ந்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் மற்றும் காந்தவயல் கிராமங்களை இணைக்கும் உயர்மட்டப் பாலம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ள நிலையில் பொதுமக்கள்,விவசாயிகள்,மாணவர்கள் என அனைவரும் தினமும் பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அதிக ஆழமுள்ள ஆற்றின் இந்தப் பகுதியில் பரிசல் பயணம் என்பது மிகுந்த ஆபத்தானதாகும்


ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் இந்த உயர்மட்டப் பாலம் வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாகியிருக்கிறது ஐந்து கிராம மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் இத்தனை முக்கியமான பகுதியில் புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடந்து கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பால வேலைகள் நிறைவுபெறும் வரையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலகட்டத்தில் விவசாயிகள் பெண்கள், மாணவர்கள் முதியவர்கள் குழந்தைகள் என பொதுமக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்வதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் இலவச இயந்திர படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News