Kathir News
Begin typing your search above and press return to search.

பேனா சிலைக்கும் கார் ரேசுக்கும் இருக்கும் நிதி,கட்டளை வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்திற்கு இல்லையா:நயினார் நாகேந்திரன்!

பேனா சிலைக்கும் கார் ரேசுக்கும் இருக்கும் நிதி,கட்டளை வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்திற்கு இல்லையா:நயினார் நாகேந்திரன்!
X

SushmithaBy : Sushmitha

  |  18 July 2025 9:08 PM IST

தமிழக அரசு கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமாகத் திகழும் கட்டளை வாய்க்காலின் புனரமைப்புத் திட்டத்தை நிதிப் பற்றாக்குறை என்று கூறி 2021-ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

புனரமைப்புத் திட்டத்தைக் கைவிட்ட காரணத்தால் புதர் மண்டிக் கிடப்பதோடு செடி கொடிகள் வளர்ந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வருவதில் சிரமமாகி பயிர்கள் வாடி வதங்கும் நிலை உருவாகியுள்ளது பருவமழைப் பொய்த்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை மட்டுமே சாகுபடிக்காக விவசாயிகள் நம்பி வரும் வேளையில், வாய்க்காலைப் புனரமைக்காமல் காலந்தாழ்த்துவது முறையா

பேனா சிலை கார் ரேஸ் என பல வீண் ஆடம்பர விளம்பரங்களுக்கு செலவு செய்யத் தயாராக இருக்கும் திமுக அரசு உழவர் நலனைக் காப்பதற்காக மட்டும் செலவு செய்ய யோசிப்பது ஏன்?நான்காண்டுகளாக உழவர் நலனைக் கண்டுகொள்ளாது இத்திட்டத்தைக் கிடப்பில் போடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா

விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது மேடைகளில் மட்டும் நானும் டெல்டாக்காரன் தான் என்று முழங்கும் இந்த விளம்பர மாடல் ஆட்சியைவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் விரட்டியடிப்பர் என்பது உறுதி என கண்டனம் தெரிவித்துள்ளனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News