திமுகவை விட்டு விலகும் கூட்டணி கட்சிகள்:உடைத்து பேசிய அண்ணாமலை!

By : Sushmitha
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது தமிழகத்தை பொறுத்தவரையில் ஏழை எளிய மக்களை குறிவைத்து கிட்னி விற்பனை செய்யப்படுகிறது குறிப்பாக தமிழகத்தில் நாமக்கல்லில் அதிகமாக எளிய மக்களை குறிவைத்து புரோக்கர்கள் கிட்னி செய்கின்றனர் அந்த விவகாரத்தில் ஒரு புரோக்கருடன் திமுகவின் முக்கிய நிர்வாகிக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது
அதனால் இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் மேலும் காமராஜரை கேவலப்படுத்திய பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கலாமா அல்லது விலகலாமா என்ற நிலையில் தான் உள்ளது அதேபோன்றுதான் கம்யூனிஸ்டு கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் உள்ளனர் என ஒரு பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார் அண்ணாமலை
