Kathir News
Begin typing your search above and press return to search.

நீங்கள் இந்தியன் தானா? ராகுலை நோக்கி கேள்விகளை எழுப்பிய சுப்ரீம் கோர்ட்!

நீங்கள் இந்தியன் தானா? ராகுலை நோக்கி கேள்விகளை எழுப்பிய சுப்ரீம் கோர்ட்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Aug 2025 11:00 PM IST

காங்கிரஸ் MP-யான ராகுல் காந்தியை அவர்கள் சீன விவகாரம் தொடர்பாக பேசியதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை அவர் முன் வைத்து இருக்கிறது. குறிப்பாக நீங்கள் ஒரு இந்தியராக இருந்தால் இவ்வாறு பேச மாட்டீர்கள்? என்பது போன்ற மிகவும் வலுவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறது. சீனா , இந்தியா இடையிலான மோதல் மற்றும் சீனாவால் இந்திய எல்லை பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பிரச்சனை குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் கடும் கேள்விகளை எழுப்பினார்.


சீன வீரர்கள் இந்திய வீரர்களை அடித்து கொண்டிருந்த போது, எல்லையில் இந்தியா மீதான சீனாவின் தாக்குதல் குறித்து யாரும் பேசாமல் எனது பாரத் யாத்திரை குறித்து கேள்வி எழுப்புகின்றனர் என்றார். இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக லக்னோ கோர்ட்டில் ராகுலுக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர்தத்தா, ஏஜி மாய்ஸ், ராகுல் குறித்து கடுமையாக கேள்விகள் எழுப்பினர். உண்மையான இந்தியரா? ஒரு எதிர்கட்சி தலைவராக இருக்கும் நீங்கள் ஏன் இது போன்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறீர்கள், இப்படி செய்யலாமா? உண்மையான தேசபற்று உள்ள நபர்கள் இப்படி பேசலாமா என்பது போன்று கடுமையான விமர்சனங்களை அவர் மீது முன் வைத்து இருக்கிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News