அதிமுக நடத்திய பிரச்சாரத்தில் பாஜகவினர்!! பாஜக-அதிமுக கூட்டணியால் வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம்!

By : G Pradeep
2026 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ச்சியாக பல இடங்களில் ஒவ்வொரு கட்சிகளும் பிரச்சாரங்கள் நடத்தி வருவது போன்ற செயல்கள் நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகத்தில் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மேட்டுப்பாளையம் பகுதியில் தொடங்கி தற்பொழுது வரை தஞ்சை போன்ற மாவட்டங்கள் முதல் கொண்டு 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதியில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தொடங்கிய பிரச்சாரம் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நடத்தப்பட்டு வந்தது. அதில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் அதிக அளவில் திரண்டு தங்களுடைய ஆதரவை கொடுத்து வந்தது.
குறிப்பாக அதில் பாஜக கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். மேலும் பாஜக நிர்வாகி பழனிச்சாமியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிக்காட்டினார்.
மேலும் பாஜக நிர்வாகி அளித்த பேட்டியில் வரப்போகும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும், அடிப்படையில் பழனிச்சாமி பிரச்சாரத்தில் பாஜகவினர் அதிக அளவில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
