மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.. தமிழக அரசியல் வார இதழ் கருத்து கணிப்பு.!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 123க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழக அரசியல் வார இதழ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 123க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழக அரசியல் வார இதழ் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. அதிமுக கூட்டணி கட்சிக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் அமோக ஆதரவு பெருகி வருகிறது. எதிர் அணியில் உள்ள திமுகவிற்கு மக்களிடம் போதுமான ஆதரவு இல்லை என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 123க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழக அரசியல் வார இதழ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
திமுக கூட்டணி 90 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி மேலும் சில இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது எனவும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.