Kathir News
Begin typing your search above and press return to search.

பீகார் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி வெல்லும் - டெல்லி பல்கலைக்கழக கருத்துக்கணிப்பு!

பீகார் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி வெல்லும் - டெல்லி பல்கலைக்கழக கருத்துக்கணிப்பு!

பீகார் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி வெல்லும் - டெல்லி பல்கலைக்கழக கருத்துக்கணிப்பு!

Saffron MomBy : Saffron Mom

  |  10 Nov 2020 6:00 AM GMT

பீகார் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்து, நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் (exit polls) நிதீஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணியையை விட, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகாகாத்பந்தன் (MGB) கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் (DU ) ஆராய்ச்சி பிரிவும், அரசியல் அறிவியல் துறையும் இணைந்து நடத்திய ஒரு கணக்கெடுப்பில் மாறுபட்டு, NDA கூட்டணி 45 சதவிகித வாக்குகளைப் பெற்று 129 இடங்களை கைப்பற்றும் என்றும் (பெரும்பான்மை இடங்களை பெற 122 இடங்கள் வேண்டும்) RJD தலைமையிலான மகாகாத்பந்தன் 38 சதவிகித வாக்குகளையும் 106 இடங்களையும் பெறலாம் என கணித்துள்ளது.

NDA கூட்டணியில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம், LJP ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டு 40 பாராளுமன்றத் தொகுதிகளில் 39-ஐ 2019 பொதுத் தேர்தல்களில் கைப்பற்றின. அதன்படி பார்த்தால் இன்றைக்கு பெரும்பான்மை கிடைப்பது நிச்சயம் எனத் தோன்றும். ஆனால் 2019 பொதுத் தேர்தல்களில் மக்கள் பிரதமர் மோடிக்கு ஓட்டளித்தனர், எந்த கட்சி எந்த வேட்பாளர் என்றாலும் மோடியை பிரதமராக்க யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமோ அவர்களுக்கு ஓட்டு அளித்து விட்டனர். அதேபோல் பாஸ்வானின் LJP கட்சியும் இத்தேர்தலில் தனியாக போட்டி போடுகிறது.

மறுபுறத்தில் NDA முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு எதிராக அதிருப்தி அலை வீசி வருவதாகக் கூறப்படுகிறது 110 இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க, நிதிஷ்குமாரின் கட்சியை விட நன்றாக ஓட்டுகள் வாங்கி வெற்றியை தேடி தரலாம் என கணிக்கப்படுகிறது. கூட்டணி இல்லாமல் தனியாக நின்று இருந்தால் பா.ஜ.க எளிதாக வென்று இருக்கலாம் என இந்தியா டுடேவின் ஆக்ஸிஸ் இந்தியாவை சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் பா.ஜ.க மேலிடம் நிதிஷ்குமார், சுஷில் மோடி என யாருக்கு எதிராக அதிருப்தி அலை வீசுகிறதோ, அவர்களை திரும்ப முன்னிறுத்தியது. கிட்டத்தட்ட அனைத்து கருத்துகணிப்புகளையும் சரியாக கணித்த இந்தியா டுடேவின் ஆக்சஸ் மை இந்தியா போல் இந்த முறை 139 முதல் 161 இடங்களை மகாகாத்பந்தனுக்கு வழங்குகிறது. மற்ற கருத்துக் கணிப்புகளும் MGB க்கே சாதகமாக உள்ளன. இந்த டெல்லி பல்கலைக்கழக கருத்துக்கணிப்பு முடிவுகள் NDAக்கு நம்பிக்கை அளிக்கிறது.'

கொரானா வைரஸ் ஊரடங்கையும், புலம்பெயர் தொழிலாளர் நிலைமையையும் சரியாக கையாளவில்லை என நிதிஷ்குமார் மீது அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை சொந்த ஊருக்கு திரும்ப அழைக்காமல் இருக்கும் இடத்திலேயே பிகார் முதல்வர் தங்க சொன்னார். இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் 44 சதவிகிதம் பேர் MGB கூட்டணியும் 37 சதவிகிதம் பேர் NDA வையும் தேர்ந்தெடுத்ததாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

நிதிஷ் குமாருக்கு எதிரான மக்கள் கோபத்தைப் புரிந்து கொண்டதால் தான் ராம் விலாஸ் பாஸ்வான் வழி நடத்தும் LJP, பிஹார் மாநிலத்தில் மட்டும் NDAவை விட்டு பிரிந்தது எனவும் ஆனால் மத்தியில் மோடி அரசுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் கட்சி பா.ஜ.க.வை விட குறைவாகவே வெற்றிபெறும் என்றும் இதனால் தான் கணிக்கப்படுகிறது. முடிவுகள் நாளை மதியத்திற்குள் தெரிந்துவிடும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News