Kathir News
Begin typing your search above and press return to search.

40 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் களத்தில் ஊட்டி வேட்பாளர் போஜராஜன்! பா.ஜ.க வெற்றி மாலை சூடுமா?

40 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் களத்தில் ஊட்டி வேட்பாளர் போஜராஜன்! பா.ஜ.க வெற்றி மாலை சூடுமா?

Saffron MomBy : Saffron Mom

  |  19 March 2021 3:18 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல்கள் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் களை கட்டி வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க மூன்று வேட்பாளர்களை மட்டும் அறிவிப்பதை நிறுத்தி வைத்திருந்தது.

சமீபத்தில் அந்த பெயர்களையும் வெளியிட்டது. சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் வேட்பாளர்களை தேடித்தேடி முன்னணிக்கு கொண்டு வருவதில் பா.ஜ.க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சியில் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் சரஸ்வதி, நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் MR காந்தி, திட்டக்குடியில் போட்டியிடும் தடா பெரியசாமி ஆகியோர் சில உதாரணம்.

ஊட்டியில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் ஹிட்டக்கால் போஜராஜன் 40 வருடங்களுக்கு பிறகு அரசியல் களத்தில் மறுபடியும் இறங்குகிறார். தன்னுடைய சமூக சேவை நடவடிக்கைகளுக்காக அறியப்படும் இந்த தொழிலதிபர், 1980 இல் ஊட்டி காங்கிரஸ் வேட்பாளராக கிட்டத்தட்ட களமிறங்கினார் என்பது சுவாரஸ்யமான விஷயம்.

அந்த தேர்தலில் பெரும்பாலும் வெற்றி அடைவார் என அறியப்பட்ட போஜராஜனை கடைசி நேரத்தில் நீக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சி கோயம்புத்தூரிலிருந்து பிரபு என்பவரை போட்டியிட அழைத்து வந்தது.

இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த போஜராஜன் அரசியலில் இருந்து விலகி தேயிலை பயிரிடுவது, தேயிலை உற்பத்தி மற்றும் வேறு பல தொழில்களில் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.

தற்பொழுது 40 வருடங்களுக்குப் பிறகு அவர் பா.ஜ.க-வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தன்னுடைய எளிமைக்காகவும், மக்களிடையே உள்ள நல்ல தொடர்பினாலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் அவருக்கு பா.ஜ.க வாய்ப்பளித்து உள்ளது.

ஊட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷூக்கு கடினமான போட்டியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருக்கு எதிராக தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கணேஷ் மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2011 தேர்தலில் அ.தி.மு.கவிடம் தோல்வியடைந்த இவர் 2016ல் மறுபடியும் வெற்றியடைந்தார். 1957லிருந்து காங்கிரஸின் வலிமையான ஒரு தொகுதியாக விளங்கும் உதகமண்டலத்தில், கடந்த பதினான்கு தேர்தல்களில் ஒன்பது முறை வெற்றி அடைந்திருக்கிறது காங்கிரஸ். இதனால் பெரும்பாலும் இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது.

நீலகிரியை சேர்ந்த படுகா சமூகத்தினர் எம்.எல்.ஏ-க்கள் ஆக இருந்து வந்திருக்கிறார்கள். பா.ஜ.க சார்பில் போட்டியிடும் போஜராஜனும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

உதகமண்டலத்தில் இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என்று பரவலாக அறியப்படுகிறது.

இதுகுறித்து போஜராஜன் டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பா.ஜ.கவில் 2014 சேர்ந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமை, நேர்மை, மற்றும் நாட்டை நாட்டை நவீன காலத்திற்கு ஏற்றவாறு முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறையும் தன்னை அவரின் பக்கம் திரும்பியதாகவும் கூறியிருக்கிறார்.

ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு தன்னுடைய முன்னுரிமைகளை விரைவில் மக்களிடம் வெளிப்படுத்தி ஒரு தொடர்பை ஏற்படுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News