Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சரின் பதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது ! - ஓ.பன்னீர்செல்வம் !

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னார் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஏழு பேர் விடுதலை பற்றி செய்தியாளர்களிடையே பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலை பார்க்கும்போது ‘கழுவுற மீனிலே நழுவுற மீன்’ என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.

அமைச்சரின் பதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது ! - ஓ.பன்னீர்செல்வம் !

ThangaveluBy : Thangavelu

  |  20 Sep 2021 11:32 AM GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னார் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஏழு பேர் விடுதலை பற்றி செய்தியாளர்களிடையே பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலை பார்க்கும்போது 'கழுவுற மீனிலே நழுவுற மீன்' என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.

அதிமுக ஆட்சியில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை விடுதலை செய்யப் பரிந்துரைத்து கடந்த 9.092018 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இது குறித்து 07.01.2019 அன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 116 நாட்கள் கடந்துவிட்டன என்றும், இந்த ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இதுவரையில் எந்த முடிவையும் எடுக்காமல், அதை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்து, அமைச்சரவையில் எடுத்த முடிவை இப்படி காலவரையின்றி ஓர் ஆளுநர் தன்னிடமே வைத்துக் கொள்வது, மக்களாட்சியினுடைய மாண்புக்கு விரோதமானது இல்லையா என்று வினவியிருக்கிறார்.


இது மட்டுமல்லாமல் 02.02.2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற ஆரம்பிக்கும்போது, ஏழு பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காததை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தப் பிரச்சனையில் அதிமுக போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், மேற்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் குடியரசுத்தலைவருக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின் பரிந்துரையை குடியரசுத்தலைவருக்கு, ஆளுநர் பரிந்துரைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக ஏழு பேர் விடுதலை குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் 19.08.2021 அன்று குடியரசுத் தலைவருக்கு, மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழு பேரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் கடிதம் எழுதி 124 நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது பொது மக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக, முந்தைய ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் புதிய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.

அமைச்சரின் பேட்டியை பார்க்கும்போது, இந்தப் பிரச்சனையையும் நீட் பிரச்சனைப் போன்று திமுக அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டதோ என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது.

எனவே, முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, தனிப்பட்ட முறையிலும், திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழு பேர் விடுதலை உறுதி செய் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: O.Panneerselvam Twiter

Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News