Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் ரெய்டு.. ஓபிஎஸ்., ஈபிஎஸ் அதிரடி பேட்டி.!

கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ஆட்சியின்போது பல்வேறு ஊழல் செய்ததாக திமுக சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் ரெய்டு.. ஓபிஎஸ்., ஈபிஎஸ் அதிரடி பேட்டி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2021 4:33 PM IST

அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை நடத்தினர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ஆட்சியின்போது பல்வேறு ஊழல் செய்ததாக திமுக சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக புகார் எழுந்ததது. இதனால் கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News