பிரதமரை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ்., ஓபிஎஸ் சந்திப்பு.!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் சந்தித்து பேசி வருவது தமிழக அரசியலில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பின்போது மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பிதுரை, ரவீந்திரநாத் எம்.பி., முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் சென்றனர்.
ஏற்கனவே நேற்று பிரதமர் மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.