Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுலின் தமிழ் வணக்கம்! மீம் படைப்பாளிகளுக்கு ஓவர் டைம்!

ராகுலின் தமிழ் வணக்கம்! மீம் படைப்பாளிகளுக்கு ஓவர் டைம்!

ராகுலின் தமிழ் வணக்கம்! மீம் படைப்பாளிகளுக்கு ஓவர் டைம்!
X

Saffron MomBy : Saffron Mom

  |  25 Jan 2021 12:45 PM IST

தன்னுடைய உளறல் பேச்சுகளுக்கு பெயர் போன ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அவர் மேற்கொண்டு வரும் 'ராகுலின் தமிழ் வணக்கம்' பிரச்சாரப் பயணத்தில் தன் உளறல் தொகுப்பில் பல சம்பவங்களை சேர்த்தார்.

ராகுலின் தமிழ் வணக்கம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ராகுல் காந்தியின் மூன்று நாள் கோயம்புத்தூர் வருகையின் பொழுது, ஒரு பிரச்சார வாகனத்தில் இருந்த ராகுல் காந்தி, "தமிழ் நாடு இந்தியா என்று நாம் கூறினால், நாம் இந்தியா, தமிழ்நாடு என்றும் கூற வேண்டும்; மோடி சொன்னது போல், தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி அல்ல; ஆனால் இந்தியாவே தமிழ் நாடு தான்" என்று ஒருவாறு 'பொருள்படும் படி' ஆங்கிலத்தில் பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இதை மொழிபெயர்த்து சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ராகுல்காந்தி பயங்கர கிண்டல்களும் மீம்களுக்கும் ஆளானார். இதற்கு முன்னதாக ராகுல் காந்தி ஜல்லிக்கட்டை மாட்டுப்பொங்கலன்று பார்க்க வந்திருந்தார். அப்பொழுது அங்கிருந்த நிருபர்களிடம் தமிழுணர்வு பற்றி பேச்சு கொடுத்தார். பரீட்சையில் திடீர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் எதை எதையோ உளரும் ஒருவரைப் போல ராகுல் காந்தி கூறியது இருந்ததாக அனைவரும் சுட்டிக்காட்டினர்.

இன்று ஈரோட்டில், இந்தியாவின் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தால் சீனா இந்தியாவில் எக்காரணம் கொண்டும் நுழைய முடியாது என்று சம்பந்தமே இல்லாமல் கூறினார். இது நம் ராணுவதினருக்கு ஒரு அவமானம் என்பதையும் தாண்டி, இதில் என்ன பொருள்படும் படி கூறினார் எனத் தெரியவில்லை.

ராகுலின் உரையை அங்கே மொழி பெயர்த்துக் கொண்டிருந்த மொழிபெயர்ப்பாளர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேரிட்டது. இதை தொடர்ந்து சமூக ஊடகங்களில், ராகுல் காந்தியின் உரையை தமிழில் மொழிபெயர்க்க முடியாமல் தப்பிக்க அவர் மயக்கமடைந்து விழுந்து பலர் கிண்டலடித்து வந்தனர். பலரும் ராகுல் காந்தியின் வருகை ரொம்பவே பொழுது போக்காக இருந்தது என கலாய்த்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News