தமிழகத்தில் தனித்து களமிறங்கும் ஓவைசியின் AIMIM கட்சி - "ஐயோ போச்சே" என வெடவெடக்கும் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் தனித்து களமிறங்கும் ஓவைசியின் AIMIM கட்சி - "ஐயோ போச்சே" என வெடவெடக்கும் மு.க.ஸ்டாலின்!
By : Kathir Webdesk
ஹைதராபாத்தைச் சேர்ந்த அசாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM கட்சி 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 25-30 இடங்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் வக்கீல் அகமது தெரிவித்தது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
மேலும் அவர் "எங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி நேரடியான எதிரியாக உள்ளது ஆனால் காங்கிரஸ் கட்சியோ முஸ்லிம்களை முதுகில் குத்தியது என்றும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் மக்களை அணி திரட்டவில்லை, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் மட்டுமே தெரிவித்தது" என வெடித்து தள்ளியுள்ளார்.
தி.மு.க ஹிந்துக்களை 60 வருடங்களாக ஏளனப்படுத்தியது எல்லாம் சிறுபான்மை வாக்குக்களை மொத்தமாக அறுவடை செய்யத்தான். ஆனால், தற்போது ஓவைசியின் கட்சி போட்டியிட்டால் இஸ்லாமிய வாக்குக்கள் சிதறி அது தி.மு.க-வுக்கு தேர்தலில் பெரிய பின்னடைவாக இருக்கும் என சோகத்தில் மூழ்கியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், ஓவைசி கட்சித்தலைவரோ "கடந்த இரண்டு மாதங்களாக தி.மு.கவின் பொதுச் செயலாளர் துரைமுருகனுடன் கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
அதிதீவிர இஸ்லாமிய ஆதரவாளரான ஓவைசியுடன் கூட்டணி வைத்தால் தனது ஹிந்து வாக்குவங்கிக்கு பங்கம் வந்து விடுமோ எனவும் கவலை, கூட்டணி வைக்காமல் தனித்து ஓவைசி கட்சி நின்றாலும் சிறுபான்மை வாக்கு சிதறிவிடும் என கவலை என குழப்பத்தின் உச்சத்தில் தி.மு.க தலைமை மண்டையை பிய்த்துக் கொள்கிறதாம்.