Kathir News
Begin typing your search above and press return to search.

பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகன் வேட்புமனுத்தாக்கல் செய்தார்

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகன் வேட்புமனுத்தாக்கல் செய்தார்
X

ThangaveluBy : Thangavelu

  |  15 March 2021 7:10 AM GMT

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி.அன்பழகன் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரும், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி மற்றும் தனித்துணை ஆட்சியரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி மற்றும் பாஜக மாவட்ட தலைவர் உடனிருந்தனர். மற்றும் அதிமுக, பாமக, பாஜக, தமாகா தொண்டர்கள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News