Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக இடைக்கால பட்ஜெட் 23ம் தேதி பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.!

தமிழக இடைக்கால பட்ஜெட் 23ம் தேதி பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.!

தமிழக இடைக்கால பட்ஜெட் 23ம் தேதி பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2021 7:34 PM IST

தமிழக இடைக்கால பட்ஜெட் வருகின்ற 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கடந்த 2ம் தேதி தொடங்கியது.

கொரோனா தொற்று காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபாலால் ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், தமிழக இடைக்கால பட்ஜெட் வருகின்ற 23ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதனை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இது இந்த ஆண்டிற்கான கடைசி இடைக்கால பட்ஜெட் ஆகும். தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News