Kathir News
Begin typing your search above and press return to search.

"தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதம்" - ரஜினி உடனான கூட்டணி பற்றி அழகிரியின் சூசக பதில்.!

"தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதம்" - ரஜினி உடனான கூட்டணி பற்றி அழகிரியின் சூசக பதில்.!

தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதம் - ரஜினி உடனான கூட்டணி பற்றி அழகிரியின் சூசக பதில்.!

Mohan RajBy : Mohan Raj

  |  10 Dec 2020 4:30 PM GMT

திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வந்த நாள் முதல் பல்வேறு வகையில் அரசியலில் பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் மறைந்த தி.மு.க தலைவர் மூத்த மகன் மு.க.அழகிரியின் அரசியல் மறுபிரவேசம் குறித்தும், அவர் ரஜினியுடன் இணையவிருக்கிறார் எனவும் பல்வேறு செய்திகள் உலா வந்த நிலையில் தனது நிலைப்பாட்டை பற்றி இன்று செய்தியாளர்களுக்கு அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர், "கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன். வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம். தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதமாக உள்ளது.

அதைப்பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, ஓட்டு போடுவதுகூட ஒரு பங்களிப்புதான். ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரஜினியுடன் கூட்டணி வாய்ப்பு குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது” எனத் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News