PCR வழக்குப்பதிந்து ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க போராட்டம்!
By : Thangavelu
அமைச்சர் ராஜகண்ணப்பனை வேறு துறைக்கு மாற்றினால் போதாது. உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர் சங்கம் மற்றும் ஆதிதமிழர் கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், வட்டாள வளர்ச்சி அலுவலரான ராஜேந்திரனை சிவகங்கையில் உள்ள வீட்டிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வரவழைத்து ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிடிஓ ராஜேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இதனால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் அமைச்சருக்கு எதிராக பட்டியலின மக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். அது மட்டுமின்றி தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கும் என்று தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் எச்சரிக்கை நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar