தமிழகத்தில் 3வது அணியை மக்கள் ஏற்பதில்லை.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
தமிழகத்தில் 3வது அணியை மக்கள் ஏற்பதில்லை.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

தமிழக தேர்தல் களத்தில் எப்போதும் இரண்டு அணிகளுக்கு மட்டுமே போட்டி இருக்கும். அதுவும் திராவிட கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளுக்கும் மட்டுமே. மக்கள் 3வது அணியை ஏற்பதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர் கமல் போன்ற 3 வது அணியில் உள்ள ஒருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பற்றிய கேள்விக்கு இந்த பதிலை அளித்துள்ளார். 3வது அணியை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றும், கடந்த சட்டபேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடைந்ததே அதற்கு ஒரு உதாரணம்.
தற்போதுள்ள எங்கள் கூட்டணியில் மாற்றம் வராது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் அறிவித்த பின்னர் ஆலோசிக்கப்படும் என கூறினார். பாஜகவுடன் கூட்டணி பற்றி அதிமுகவிற்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் கூட்டணி தொடர்வதை அறிவித்துள்ளோம் என்பதனை சுட்டிக்காட்டினார்.
மேலும், தமக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் கருத்து வேறுபாடு என கூறப்படுவதை மறுத்த முதலமைச்சர், இரண்டு பேரும் இணைந்து கட்சிக்காகவும், மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.