Kathir News
Begin typing your search above and press return to search.

"பஜாரி சுந்தரவள்ளி ரொம்ப ஓல்டு, புதுசா ஏதாவது போடுங்கள்" - ஒப்புக்கொண்ட பெரியாரிய சுந்தரவள்ளி.!

"பஜாரி சுந்தரவள்ளி ரொம்ப ஓல்டு, புதுசா ஏதாவது போடுங்கள்" - ஒப்புக்கொண்ட பெரியாரிய சுந்தரவள்ளி.!

பஜாரி சுந்தரவள்ளி ரொம்ப ஓல்டு, புதுசா ஏதாவது போடுங்கள் - ஒப்புக்கொண்ட பெரியாரிய சுந்தரவள்ளி.!

Mohan RajBy : Mohan Raj

  |  10 Nov 2020 10:30 AM GMT

இந்து மதம் பெண்களை கும்பிடும் சிறப்பும், பண்பும் வாய்ந்தது, ஆனால் அதனை மறுக்கும் 'பெரியாரிய கருத்துக்களை பின்பற்றுகிறேன் பேர்வழி' என கருத்து கூறும் நபர்களோ பெண் சளைத்தவள் அல்ல, துணிந்தவள் என கிளப்பி விட்டு அதன் மூலம் பெண்களை சமமாக நடத்த வேண்டும் என கூக்குரலிட்டு வருகின்றனர். இந்த விஷமம் புரியாத பெண்களோ எது சமதர்மம் என தெரியாமல் செய்யக்கூடாத செய்கைகளை எல்லாம் செய்து நாமும் எல்லாருக்கும் சமம் என நிமிர்ந்து நிற்பது கேலியாக உள்ளது. இந்த வகையில் சில காலமாக குறிப்பிட்ட பெண்கள் பெரியாரிசத்தை பின்பற்றுகிறேன் பேர்வழி, நானும் சமதர்ம சுடர் தான் என்று பொது வெளியில் திரிகின்றனர்.

அந்த வகையில் சுந்தரவள்ளி என்ற பெண்மணி தன்னை பெரியாரியவாதி என கூறிக்கொண்டு சமூக வலைதளங்களில் வலம் வருபவர். அவர் நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பின்வருமாறு பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியது, "பெண் விடுதலை இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்று கூறிய பெரியார் அவர்களையும் வணங்கி நான் என்னுடைய கருத்துகளை எடுத்து வைக்க கடமைப்பட்டுள்ளேன். வாக்குகளை விட சமூக நீதியே முக்கியம் என்று இன்றைக்கு நாம் அரசியலில் களமாடி வருகிறோம். மண்ணின் விடுதலையும், மக்களும் தான் முக்கியம் என்பதை இன்றைக்கு அண்ணன் திருமா உறுதி செய்து காட்டியுள்ளார்.

அவரின் அந்த உறுதியை பிடித்துக்கொண்டு நாமும் பின்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்" என்றார். மேலும் பேசிய அவர், "இன்றைக்கு சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை, பெண்களும் அரசியலுக்கு வரட்டும். வரவேற்று அக மகிழ்கிறோம்.

அந்த துறையில் இருந்து அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து சாதித்தவர்கள் இன்றைக்கு ஏராளம். குஷ்பு, காயத்ரி முதலியவர்களையும் நாம் அரசியல் படுத்த வேண்டிய அவசியம் நமக்கு இருகிறது தோழர்களே. மிஸ்டர் திருவமாவளவன் என்று சொல்லும் அவர்கள் அரசியல் செய்ய நாம் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, "பாஜாரி சுந்தரவள்ளி என்று ஓங்கி கத்துகிறார்கள். நான் கூட அது ரொம் ஓல்டு, புதுசா எதாவது போடுங்கள் என சொல்லலாம் என்கிறேன். பெண்கள் அரசியலுக்கு வரட்டும், வந்து பேசட்டும், ஆனால் அவர்களை அரசியல் படுத்தும் வேலைகளை நாம் தொடர்ந்து செய்வோம்" என பேசினார்.

பெண்களின் சம உரிமை என்பது பெரியாரியவாதிகளால் எவ்வாறு தவறாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது, எவ்வாறு பெண்களை ஏளனம் செய்யப்பட்டு வருகிறது என்பதை உணராத சில பெண்கள் 'பெரியாரிசம்' பேசுகின்றனர். பாவம் அவர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News