ஸ்ரீரங்கத்தில் குங்குமத்தை அழித்த ஸ்டாலினுக்கு பெருமாள் நம்பிக்கை உண்டாம் - அப்பட்டமாக பொய் சொன்ன துர்கா ஸ்டாலின்
ஸ்ரீரங்கத்தில் குங்குமத்தை அழித்த ஸ்டாலினுக்கு பெருமாள் நம்பிக்கை உண்டாம் - அப்பட்டமாக பொய் சொன்ன துர்கா ஸ்டாலின்
By : Mohan Raj
இந்துக்கள் வாக்கு வங்கியால் தி.மு.க பலமான அடி வாங்கும் என இந்துக்களை விட தி.மு.க நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈ.வே.ராமசாமியை தி.மு.க தூக்கி தூர வீசிவிட்டு வேலை தூக்கி நின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த தி.மு.க விழாவில் "என் மனைவி போகாத கோவிலே இல்லை" என்றார் ஸ்டாலின்.
பின் விராலிமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் "ஓடாமல் இருந்த விராலிமலை முருகன் கோவில் தேரோட்டத்தை நடத்திகாட்டியவர் என் தந்தை கருணாநிதி" என பெருமை பேசினார். திருத்தணியில் நடந்த தி.மு.க பிரச்சார கூட்டத்தில் முருகப்பெருமானின் வேலை கையில் ஏந்தி வாயெல்லாம் பல்லாக சிரித்தார் பிண்ணனியில் ப்ளக்ஸ்'ல் அண்ணாதுரையும், கருணாநிதியும் அதைவிட பலமாக புகைப்படத்தில் சிரித்தனர்.
தகப்பன் எட்டு அடி என்றால் மகன் பதினாறு அடி என்பது போல பிரச்சாரங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் இருக்கும் மடம், ஆதீனங்களுக்கு சென்று பவ்யமாக கைகட்டி நின்றார் உதயநிதி. திருவாடுதுறை ஆதீனத்தை சாஷ்டாங்கமாக குனிந்து வணங்கினார். ஜீயரிடத்தில் சடாரி மட்டும் வாங்கவில்லை பவ்யமெல்லாம் அதிகமாக இருந்தது தி.மு.க'வின் பட்டத்து இளவரசருக்கு.
பிரச்சார கூட்டத்தில் குடுத்த முருகப்பெருமானின் சிலை மற்றும் வேலை வாங்கி கிருபானந்த வாரியர் போன்று போஸ் குடுத்தார் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. பின் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரிடம் பவ்யம் காட்டினார் சிகப்பு வேட்டி மட்டும் தான் இல்லை.
இவர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக கனிமொழி நெற்றியில் குங்குமத்தை கேமராவில் பளிச்' என தெரியுமாறு வைத்துக்கொண்டு வலம் வந்தார். இப்படி கருணாநிதி குடும்பமே காவடி எடுத்து அலகு குத்தாத குறையாக சுற்றியும் இந்துக்கள் மசிவதாக இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளனர் தி.மு.க'வினர் இருந்தாலும் விடுவார்களா பத்து வருட பசி ஆயிற்றே இன்னமும் விழுந்து பார்ப்போமே தற்பொழுது புதிய பிரச்சார யுக்தியாக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களை கோவில் பிரச்சாரத்தில் இறக்கியுள்ளனர் தி.மு.க'வினர்.
இவர் நேற்று இரவு நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானுமாலை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்றிரவு அங்கு சென்ற துர்கா, வானுமாலை ராமனுஜர் ஜீயரிடம் ஆசி பெற்றார். அப்போது, துர்காவின் உறவினர் பெண்கள் மற்றும் தி.மு.க நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு உடனிருந்தனர்.
அந்த சமயத்தில் கோயிலுக்கு வந்த மூதாட்டி ஒருவருக்கு அந்த கோவிலின் அர்ச்சகர் துர்காவை அறிமுகப்படுத்தி, 'இவர்தான் கருணாநிதி மகன் ஸ்டாலினின் மனைவி ' என்று அறிமுகப்படுத்தினார். அந்த மூதாட்டியிடன் துர்கா அன்புடன் பேசினார். அப்போது, திடீரென்று மூதாட்டி , துர்காவிடம் 'ஸ்டாலினுக்கு பெருமாள் நம்பிக்கை உண்டா ?' என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு உடனே பதிலளித்த துர்கா 'ஸ்டாலின் கோவிலுக்கு செல்வார் பெருமாள் மீது நம்பிக்கை உண்டு ' என மூதாட்டிக்கு பதிலளித்தார்.
இதே ஸ்டாலின் தான் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பிரசாதமான குங்குமத்தை நெற்றியில் வைத்த பொழுது அதனை சற்றும் யோசிக்காமல் அழித்தவர் என்பது கூடுதல் தகவல். இது பெருமாளின் மகிமையா அல்லது தி.மு.க'வின் நாடக பிரச்சாரமா என விவாதமே சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.