Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் செய்த உதவியை தடுத்து நிறுத்திய தி.மு.க. பிரமுகர் - கண்ணீருடன் புகார் அளித்த மாற்றுத்திறனாளி தம்பதி!

முதலமைச்சர் செய்த உதவியை தடுத்து நிறுத்திய தி.மு.க. பிரமுகர் - கண்ணீருடன் புகார் அளித்த மாற்றுத்திறனாளி தம்பதி!

ThangaveluBy : Thangavelu

  |  22 April 2022 3:47 PM GMT

முதலமைச்சர் தனி பிரிவுக்கு சேலத்தை சேர்ந்த தம்பதி மனு அளித்து ஒரு வழியாக ஆவின் பாலகம் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தும் பணியில் திமுக நபர் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் காளிப்பட்டியை சேர்ந்தவர் ஞானம்பாள் 55, இவர் மாற்றுத்திறனாளியான இவர் சேலம் மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது: எனது 3 பிள்ளைகள் இறந்து விட்டனர். தற்போது என்னையும் என் வீட்டுக்காரரையும் காப்பாத்தறதுக்கு வேறு வழியில்லாமல் மாற்றுத்திறனாளி உதவி திட்டத்தில் கடை அமைப்பதற்கு முயற்சி செய்தேன். அப்போது சென்னையில் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து மனு அளித்தோம். அவரும் சேலம் அரசு மருத்துவமனை அருகே ஆவின் பூத் அமைத்து கொடுப்பதாக சொன்னார். அதன்படி எனக்கு ஆர்டர் வந்துச்சி.


மாற்றுத்திறனாளி துறையில் இருந்து ரூ.50 ஆயிரம் கிடைச்சது. எனது கையில் இருந்த சில நகைகளை விற்று இரும்புப் பெட்டி செஞ்சி மருத்துவமனை அருகாமையில் வச்சேன். ஆனால் அங்கு கடை அமைப்பதை பார்த்த திமுக பிரமுகர் சிதம்பரம் இங்கு கடையிலாம் வைக்கக்கூடாது. நீங்கள் கடை வைத்தால் எனது பிழைப்பு எப்படி நடத்துவது என்று கடுமையான வார்த்தையில் கூறியுள்ளார்.

மேலும், கடை நடத்தினால் கொலை செய்து விடுவேன் என்று மாற்றுத்திறனாளி தம்பதியை சிதம்பரம் கடுமையாக மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தேன் என்று கண்ணீருடன் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News