எனக்கு தயவு செய்து ஓய்வு கொடுங்க.. கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர்.!
எனக்கு தயவு செய்து ஓய்வு கொடுங்க.. கதறும் காங்கிரஸ் பொறுப்பாளர்.!
By : Kathir Webdesk
பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி சோனியாவுக்கு சக்திசின்ஹா கோஹ்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக 3 ஆண்டுகளாக பொறுப்பு வகிப்பவர் சக்தி சின்ஹா கோஹ்லி. இவர் ராஜ்யசபா எம்.பி.,யாகவும், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளமான, ட்விட்டரில் கோஹ்லி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து என்னை விடுவிக்கும்படி, கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
என் உடல் நிலை, மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கோரிக்கையை வைத்துள்ளேன். அடுத்த சில மாதங்களுக்கு, பெரிய அளவிலான பொறுப்பு அல்லது பணி எதையும் எனக்கு தர வேண்டாம் என்றும் கட்சி தலைமையை வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் காங்கிரஸை விட்டு விலகுவதற்கு காரணம் தொடர் தோல்வியை சந்திப்பதால், அவர் விரக்தியடைந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர்.