தி.மு.க. பட்டத்து இளவரசருக்காக, முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.. பிரதமர் மோடி சரவெடி பேச்சு.!
மத்திய அமைச்சர்கள், தேசிய பாஜக தலைவர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி (ஏப்ரல்) நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரைகளை அரசியல் கட்சி தலைவர்கள் செய்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மத்திய அமைச்சர்கள், தேசிய பாஜக தலைவர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று தாராபுரத்தில் பிரதமர் மோடி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், திமுகவின் பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். எனவே வருகின்ற தேர்தலில் குடும்ப கட்சியை ஒழித்துக்கட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
