மதுரையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் பிரசாரம்.!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் அரசயில் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் அரசயில் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. இதனிடையே தேசிய பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர். இதனிடையே அதிமுக கூட்டணி மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருகின்ற 30ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் தாராபுரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
இதன் பின்னர் மதுரையில் ஏப்ரல் 2ம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். மதுரை, நாகர்கோவில் ஆகிய 2 முக்கிய நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
அதே போன்று மதுரையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.