முதல்வர் ஸ்டாலின் கையைப் பிடித்து, சாவி கொடுக்க வைத்த பிரதமர் மோடி!
By : Thangavelu
மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலமாக கட்டப்பட்ட 1,152 வீடுகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு வீட்டு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் வழங்கினார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வேத்துறை, மற்றும் காஸ் லைன் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்கான விழா ஏற்பாடுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது வீட்டுவசதித் திட்டத்தின் மூலமாக கட்டப்பட்ட 1,152 இலகுரக வீடுகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனையடுத்து பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார். அப்போது பயனாளிகள் சிலருக்கு பிரதமர் மோடி, வீடுகளுக்கான சாவியை வழங்கி வந்தார்.
அந்த நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சற்று தூரமாக நின்று கொண்டிருந்தார். இருந்தபோதிலும் விலகி இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் கையைப் பிடித்து, அழைத்து பயனாளிகளுக்கு சாவி வழங்க வைத்தார் பிரதமர் மோடி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu