கேதார்நாத் நிகழ்ச்சி: திருச்செந்தூர், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேரலையில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை மற்றும் எம்.ஆர்.காந்தி !
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று (நவம்பர் 5) காலை சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் டேராடூன் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர்.
By : Thangavelu

இதன் பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார். இதனை தமிழகத்தில் பாஜக தலைவர்கள் பிரபல கோவில்களில் நேரலையில் கண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அமைக்கப்பட்ட பிரமாண்டத் திரையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்தார்.
அதே போன்று பாஜக எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கேதார்நாத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மேம்பாட்டு திட்டங்களின் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
Source, Image Courtesy: Twiter