Kathir News
Begin typing your search above and press return to search.

PMGSY திட்டத்தில் தமிழக ஃபக்ட் செக்கிற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

PMGSY திட்டத்தில் தமிழக ஃபக்ட் செக்கிற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!
X

SushmithaBy : Sushmitha

  |  25 Feb 2024 4:47 AM GMT

தமிழ்நாட்டிற்கான பட்ஜெட்டை திமுக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததிலிருந்து மத்திய அரசின் பட்ஜெட்டை அப்படியே மாற்றி தன் பட்ஜெட் ஆக திமுக அறிவித்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாடி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் ஃபேக்ட் செக் இணையதளத்தில் PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல! என பதிவிட்டு இரண்டிற்கும் வெவ்வேறு வித்தியாசங்களை பட்டியலிட்டுள்ளது திமுக அரசு.

இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்திற்கும், தமிழக அரசு கூறியுள்ள கிராம சாலைகள் திட்டத்திற்கும் வித்தியாசம் என்ற பெயரில் ஒரு அரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது தமிழக அரசின் உண்மை (?) கண்டறியும் குழு.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், கடந்த 2000 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர், பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம். குக்கிராமங்களுக்கும், மலைக்கிராமங்களுக்கும் தார் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்தில் செலவிட்ட நிதி ரூ.5,837 கோடி. எனினும், திருவண்ணாமலை, வேலூர் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மலைக் கிராமங்களில் சாலை வசதிகள் இல்லாமல் மருத்துவச் சிகிச்சைக்காக டோலி கட்டி தூக்கிக் கொண்டு வரும் அவல நிலைதான் தமிழகத்தில் இன்னும் இருக்கிறது. அப்படியானால், அதற்கு முன்பாக மத்தியில் 2004 – 2014 வரை பத்து ஆண்டுகளாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக, தமிழகக் கிராமங்களுக்கு ஒன்றுமே செய்ததில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

திமுக அறிவித்துள்ள முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், கடந்த 2023 ஆம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை, தமிழக கிராமங்களில் சாலை வசதிகள் அமைக்கப்படாமல் இருந்ததாகக் கூறுகிறதா திமுகவின் உண்மை அறியும் குழு? அப்படி அதற்கு முன்பாகவே கிராமங்களில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டிருந்தால், அவை எந்த நிதியில் மேற்கொள்ளப்பட்டன? மத்திய அரசின் நிதியிலா?அல்லது மாநில அரசின் நிதியிலா? கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நிதி வழங்குவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா?

இவை ஒருபுறம் இருக்க, கடந்த 18.03.2023 அன்று திமுக அரசு வெளியிட்ட அரசாணை எண் 34 ன் படி, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2022 – 2023 ஆம் ஆண்டிற்கு, ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் செலவு செய்தது, “முட்டை”. இதையும் திமுகவின் உண்மை அறியும் குழு தவறு என்று கூறுமானால், கடந்த ஆண்டு ரூ.2,300 கோடி செலவு செய்ததற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு திமுகவின் உண்மை அறியும் குழுவிற்கு கேள்விகளை முன் வைத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News