கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாமக வேட்பாளர் எம்.பிரகாஷிக்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவர் மக்கள் வெள்ளத்தில் நடுவே பாமகவுக்கு வாக்கு சேகரித்தார். அவரது வருகையை முன்னிட்டு பாமக, அதிமுக, பாஜக, தமாகா கட்சித்தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரச்சாரக்களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது