Kathir News
Begin typing your search above and press return to search.

பாமக நிறுவனர் ராமதாஸிடம் வாழ்த்துபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து பெற்றுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸிடம் வாழ்த்துபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 May 2021 10:22 AM IST

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வாழ்த்து பெற்றுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.




பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் மருத்துவர் அய்யா அவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் அவர்களுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரிடம் நலம் விசாரித்த மருத்துவர் அய்யா அவர்கள், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்கள்.

இவ்வாறு அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News