அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களும் களத்தில் இருக்கனும்: ராமதாஸ் ட்வீட்!
By : Thangavelu
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக, பாமக இடையே தொகுதி பங்கீடு கிட்டதட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டது. இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
நேற்று 110 விதியின் கீழ் அரசு வேலை வாய்ப்பில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் நேற்று முதலே பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தனர். இதனால் அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்!
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்.. அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.