Kathir News
Begin typing your search above and press return to search.

உக்கடம் புல்லுக்காடு செல்லக்கூடாது என வேலூர் இப்ராஹீமை கைது செய்த காவல்துறை - ஏன்?

உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் செல்ல முயன்ற பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உக்கடம் புல்லுக்காடு செல்லக்கூடாது என வேலூர் இப்ராஹீமை கைது செய்த காவல்துறை - ஏன்?
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Nov 2022 8:07 AM IST

உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் செல்ல முயன்ற பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் நேற்று கோவை வருகை புரிந்தார். கணபதி பகுதிக்கு சென்றவர் அங்கிருந்து உக்கடம் சி.எம்.சி காலணியில் இருக்கும் மாவட்ட பா.ஜ.க பட்டியல் என அணி தலைவர்கள் வீட்டில் இரவு உணவு சாப்பிட திட்டமிட்டு இருந்தார். அவர் அங்கு செல்வதாக கூறியதும் போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனை தொடர்ந்து வேலூர் இப்ராஹிம் கூறியதாவது, 'பா.ஜ.க நிர்வாகிகள் அனைவரும் ஒருநாள் பட்டியல் சமூக மக்களுக்கு இல்லங்களுக்கு சென்று கலந்துரையாட வேண்டும், அவர்களுடன் உணவு உண்ண வேண்டும், மத்திய அரசு சார்பில் பட்டியல மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பற்றி விளக்க வேண்டும் என்பது கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி. அதன்படி வெவ்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள நாள் கோவை வந்தேன்.

ஆனால் உக்கடம் அருகே சி.எம்.சி காலனியில் இருக்கும் பட்டியல் அணி பா.ஜ.க தலைவர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டேன் ஆனால் அங்கு செல்லக்கூடாது சென்சிடிவ் ஆன இடம் என போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சரியில்லை ஏனென்றால் நான் செல்வது ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கு கிடையாது கட்சி சார்பிலான நிகழ்ச்சி மட்டுமே அதுவும் உணவு உண்பதற்கு மட்டுமே செல்கிறேன். சென்சிட்டிவ் என்றால் பாதுகாப்பு கொடுங்கள் என கேட்கிறேன்' என கூறினார்.

அவரது வலியுறுத்தலை தொடர்ந்து காவல்துறையினர் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் செல்ல முற்படும் போது வரை கைது செய்தனர்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News