சி.வி.சண்முகம் கொடுத்த புகாரில் சசிகலா மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு.!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு சசிகலா மற்றும் மர்ம நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு சசிகலா மற்றும் மர்ம நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் சி.வி.சண்முகம், கடந்த 7ம் தேதி சசிகலாவுக்கு அதிமுகவிற்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என கூறியிருந்தார். அதற்கு அவர் பதில் கூறாமல் அடியாட்கள் மூலம் தொலைபேசி வாயிலாக சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பதிவிடப்பட்டுள்ளது.
இது பற்றி கடந்த 9ம் தேதி ரோஷணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சி.வி.சண்முகம், கொலை மிரட்டல் விடுத்ததாக 500க்கும் அதிகமான நபர்களின் தொலைபேசி எண்களையும் போலீசாரிடம் வழங்கினார். சசிகலா மற்றும் அவரது தூண்டுதலில் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், சசிகலா மற்றும் மர்ம நபர்களின் மீது கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.