Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தடுத்த காவல்துறை - பா.ஜ.க'வின் அமர் பிரசாத் ரெட்டி கைது

சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சந்திப்பில் விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறி பா.ஜ.க'வினரை போலீசார் கைது செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தடுத்த காவல்துறை - பா.ஜ.கவின் அமர் பிரசாத் ரெட்டி கைது
X

Mohan RajBy : Mohan Raj

  |  5 Sept 2022 8:07 AM IST

சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சந்திப்பில் விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறி பா.ஜ.க'வினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் நேற்று 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் மெரினா கடற்கரை பகுதிகள் கரைக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னையில் தமிழக பா.ஜ.க'வின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் பா.ஜ.க'வின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் துவங்கியது, இந்த ஊர்வலம் ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பின்னர் திருருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சந்திப்பில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல பா.ஜ.க'வினர் முயன்ற நிலையில் அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.



'ஏன் இந்த வழியாக நாங்கள் கொண்டு செல்லக்கூடாதா' என்று அமர் பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பினர். அப்பொழுது போலீசார் இல்லை என என கூறியதும் தடையை மீறி அவர்கள் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனை காரணமாக வைத்து அமர் பிரசாத் ரெட்டி மற்றும் இந்து முன்னணி பொதுச் செயலாளரின் முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விநாயகர் சதுர்த்தி எங்கள் உரிமை இதை நாங்கள் என் கொண்டாடக்கூடாது, இந்த தி.மு.க அரசு எங்களை தடுக்கப்படுகிறது என கூறியபடி அமர் பிரசாத் ரெட்டி காவல்துறையில் வாகனத்தில் ஏறி சென்றார்.



Source - Amar Prasad Reddy Tweet

Next Story
கதிர் தொகுப்பு
Trending News