Begin typing your search above and press return to search.
வடகிழக்கு மாநில மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய பிரதமர், குடியரசுத் தலைவருக்கு நன்றி ! - இல.கணேசன்.
மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்து குடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

By :
மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்து குடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவர்களில் இல.கணேசன் ஒருவர் ஆவார். இவர் தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது பற்றி இல.கணேசன் கூறியதாவது: வடகிழக்கு மாநில மக்களுக்கு சேவை செய்ய மகிழ்ச்சியுடன் செல்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Maalaimalar
Image Courtesy:BJP
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/22131712/2942167/Tamil-News-Political-leaders-greets-la-ganesan.vpf
Next Story