Begin typing your search above and press return to search.
தபால் வாக்குகளை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது.!
தென்காசியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவரும் அமமுக நிர்வாகியான கணேச பாண்டியன், மற்றொரு நிர்வாகியான செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

By :
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு பணியாளர்கள் அனைவருக்கும் தபால் வாக்கு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு பணியாளர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அது போன்ற சில இடங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தென்காசியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி மற்றும் அவரது கணவரும் அமமுக நிர்வாகியான கணேச பாண்டியன், மற்றொரு நிர்வாகியான செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மூன்று பேரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story