Kathir News
Begin typing your search above and press return to search.

சசிகலா, தினகரன் இடையே அதிகார மோதல்: மாற்றுக்கட்சிக்கு ஓட்டம் பிடிக்கும் நிர்வாகிகள்!

அமமுகவின் பொதுச்செயலாளருமான தினகரன் மற்றும் சசிகலா இடையே நிலவுகின்ற அதிகார மோதலால் அமமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றுக்கட்சிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சசிகலா, தினகரன் இடையே அதிகார மோதல்: மாற்றுக்கட்சிக்கு ஓட்டம் பிடிக்கும் நிர்வாகிகள்!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Nov 2021 8:41 AM GMT

அமமுகவின் பொதுச்செயலாளருமான தினகரன் மற்றும் சசிகலா இடையே நிலவுகின்ற அதிகார மோதலால் அமமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றுக்கட்சிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து மீண்டும் சென்னை திரும்பிய சசிகலா அதிமுகவில் நுழைவதற்கு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். ஆனால் அவரால் அந்தக்கட்சிக்குள் நுழைய முடியவில்லை.

இதன்பின்னர் தன்னிச்சையாக அறிக்கைகளை சசிகலா வெளியிட்டு வருகிறார். இதற்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வரவேற்பு கிடைக்காமல் இருக்கிறது. இதனால் மீண்டும் மழை வெள்ள பாதிப்பு பற்றிய ஆய்வுகள் உள்ளிட்டவைகளுக்கு செல்லும்போது தன்னுடன் தினகரனை அழைத்து செல்வதில்லை. அவரின் ஆலோசனையும் கேட்பதில்லை.

அதாவது சசிகலாவின் கணவரான நடராஜன் குடும்ப உறுப்பினர்களான பழனிவேல் மற்றும் ராமச்சந்திரன், டாக்டர் வெங்கடேஷ், இளவரசி மகன் விவேக் உள்ளிட்டோர்களின் ஆலோசனையை சசிகலா கேட்டுக்கொள்கிறாராம். ஆனால் தினகரனின் ஆலோசனையை எதுவும் கேட்பதில்லையாம். மேலும், தென்மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையால் பெரும்பாலான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக சசிகலா அங்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது அவரை வரவேற்க அமமுக நிர்வாகிகள் யாருமே செல்லக்கூடாது என்று தினகரன் தரப்பில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

சில மாதங்களாக அமமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான திருவாரூர் காமராஜ் மற்றும் தஞ்சாவூர் சேகர் உள்ளிட்டோர் சசிகலாவின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இடையில் அதிகார மோதல் உருவாகியுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் ஈரோவாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக அமமுகவை சேர்ந்த சில நிர்வாகிகள் பேசும்போது, சசிகலாவை புறக்கணிக்க வேண்டும் என்பது தவறான முடிவை தினகரன் எடுத்து வருகிறார். சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஆட்சி மற்றும் கட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றார். ஆனால் அதனை தினகரன் கோட்டைவிட்டு விட்டார். ஒரு கட்டத்தில் திருவாரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகளின் செயல்பாடு சரியாக இல்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார். அதற்கு நிர்வாகிகள் ஆறு மாதமாக பதுங்கு குழியில் இருந்தீர்கள். நீங்கள் கூறியதை எதை செய்யவில்லை என்று சொல்லுங்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.

இதனிடையே வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முக்கிய பதவிகள் தரப்படும் என்று தற்போது ஆளுங்கட்சி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அமமுகவை விட்டு ஓட்டம் பிடிக்கலாம் என கூறப்படுகிறது. சசிகலா, தினகரன் பின்னால் இருந்தால் அரசியல் எதிர்காலம் இருக்காது என்றும் அமமுகவினர் கருதுகின்றனர் என கூறினர்.

Source: Dinamalar

Image Courtesy:Samayam Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News