காங்கிரஸ் வெற்றி பெற சோனியாவுக்கு பிரசாந்த் கிஷோர் கூறிய வியூகம் என்ன?
By : Thangavelu
தேர்தல் வியூகராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இரண்டாவது முறையாக சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் அமைந்துள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங், கே.சி.வேணுகோபால் மற்றும் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே விரைவில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பிரச்சாரங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியை சந்தித்து 5 மணி நேரமாக ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காங்கிரஸ் நிலைமை மோசமாக இருப்பதால் அதற்கான நிறுவன அமைப்பை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்பனவையும் இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது சுமார் 370 தொகுதிகளில் தனியாக காங்கிரஸ் போட்டியிட வேண்டும். இதற்கான கவனத்தை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் நிலைமை அவருக்கே தெரியும். நடைபெற்று முடிந்த அத்தனை மாநில சட்டமன்ற தேர்தலிலும் மண்ணை கவ்வியது. இந்த கட்சியால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 50 சீட்டுக்கு மேல் வாங்குவதே கடினம் என்று பாஜகவினர் கூறிவருவதையும் பார்க்க வேண்டும்.
Source: Maalaimalar
Image Courtesy:NDTV