Kathir News
Begin typing your search above and press return to search.

சுதிஷிக்கு கொரோனா உறுதியானதால், பிரேமலதா விஜயகாந்த்துக்கு பரிசோதனை செய்ய கலெக்டர் உத்தரவு.!

விருத்தாசல் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதனையடுத்து அவர் தனது வேட்புமனுவை கடந்த 18ம் தேதி விருத்தாசலம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

சுதிஷிக்கு கொரோனா உறுதியானதால், பிரேமலதா விஜயகாந்த்துக்கு பரிசோதனை செய்ய கலெக்டர் உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 March 2021 2:12 PM GMT

விருத்தாசல் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதனையடுத்து அவர் தனது வேட்புமனுவை கடந்த 18-ம் தேதி விருத்தாசலம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அப்பபோது அவருடன் மாநில துணை செயலாளர் சுதீஷ் மற்றும் அமமுக பிரமுகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் நடந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் சுதீஷ் பங்கேற்றுவிட்டு, சென்னை திரும்பினார் அப்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.




இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் கேட்டபோது, சுதீசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதுன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரேமலதாவுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News