வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா விஜயகாந்த்!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா விஜயகாந்த்!
By : Mohan Raj
சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க அ.தி.மு.க'வுடன் கூட்டணி அமைக்காது, அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இல்லை போன்ற கருத்துக்களுக்கு இன்று விஜயகாந்த் அவர்களின் மனைவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அ.தி.மு.க'வுடன் தான் கூட்டணியில் உள்ளோம் என கூறியுள்ளார்.
தே.மு.தி.க'வின் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர், பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் பேசினார்.
அதில், "இன்று தேர்தல் வியூகம், பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் இந்த நிமிடம் வரை அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க உள்ளது. செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு அதன் பிறகு கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். கூட்டணி தரப்பில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரை தே.மு.தி.க ஏற்கும்.
தே.மு.தி.க எப்போதும் முரசு சின்னத்தில் தான் போட்டியிடும். தே.மு.தி.க'வில் இருந்து வெளியேறிச் செல்பவர்கள் குப்பைகள். தே.மு.தி.க'வில் குப்பைகளை சுத்தம் செய்து தரும் பிற கட்சிகளுக்கு நன்றி" என கூறினார்.